search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா"

    உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்துள்ளன.
    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகையான ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. மேலும் வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.

    இந்த புதிய வகை வைரஸ் 10 மடங்கு விரீயம் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போத்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. 

    பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்திருப்பதால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். உறவினர்களை பார்ப்பதற்காகவும், தொழில்ரீதியாகவும் தென் ஆப்பிரிக்கா வந்தவர்கள் கடைசியாக கிடைத்த விமானங்களில் நாடு திரும்ப முயன்றனர். 

    ‘ஒமிக்ரான்’ வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சார்ஜாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 10 ரன் வித்தியாசததில் வீழ்த்தினாலும் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    இப்போட்டியின் கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் ரபாடா வீசினார். முதல் பந்தில் வோக்ஸ், இரண்டாவது பந்தில் மார்கன், முன்றாவது பந்தில் ஜோர்டான் ஆகியோரை வெளியேற்றினார். இதன்மூலம் ரபாடா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் ரபாடா என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் அயர்லாந்தின் கர்ட்டிஸ் கேம்பர், இலங்கை அணியின் ஹசரங்கா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா இன்று பதவியேற்றார். விழாவில் சர்வதேச தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
    பிரிட்டோரியா:

    தென்னாப்பிரிக்க நாட்டி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, சிரில் ராமபோசா (வயது 66) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது.  அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.  இதனை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தலைமை நீதிபதி மொகோயெங் கடந்த வாரம் கூறினார்.



    இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ் வெர்ஸ்பெல்டு ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி இன்று அதிபராக ராமபோசா பதவியேற்று கொண்டார். 

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராமபோசா, ஊழலை ஒழிக்கவும், தடுமாறும் பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்கவும் பாடுபடுவதாக உறுதி அளித்தார்.  
    தென் ஆப்பிரிக்காவில் வரும் மே மாதம் 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். #SouthAfricaElection #CyrilRamaphosa
    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ம் ஆண்டு முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாராளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    அவ்வகையில் மே 8-ம் தேதி பொதுத்தேர்தல் (தேசிய சபை தேர்தல்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் நடைமுறைகள் தொடங்கின.

    இந்நிலையில், மே 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அதிபர் சிரில் ராமபோசா முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போடுவதற்கு ஏதுவாக, மே 8-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.



    தற்போதைய அதிபரும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராமபோசா, மீண்டும் தனி மெஜாரிட்டியுடன் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலகியதைத் தொடர்ந்து, ராமபோசா அதிபர் பதவிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. #SouthAfricaElection #CyrilRamaphosa

    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஹசிம் அம்லா 32 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். #hashimAmla #Smith
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 2-வது இன்னிங்சில் 32 ரன் எடுத்தார்.

    4-வது ரன்னை எடுத்த போது அவர் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். சுமித்தை அவர் முந்தினார். அம்லா 124-வது டெஸ்டில் 9282 ரன் எடுத்துள்ளார். சுமித் 9253 (116 டெஸ்ட்) 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். காலிஸ் 13,206 ரன்னுடன் (166 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார். #hashimAmla #Smith
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய பங்கு வகித்த குசல் பேரேராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. #KusalPerera #SAvSL
    கொழும்பு:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி 304 ரன் இலக்கை எடுத்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற குசல் பெரேரா முக்கிய பங்கு வகித்தார். அவர் 153 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்காவின் வெற்றி உறுதியான நிலையில் கடைசி விக்கெட்டை வைத்து அபாரமாக விளையாடி ஆட்டத்தை மாற்றி குசல் பெரேரா இலங்கையை வெற்றி பெற வைத்தார்.

    கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ். 214 ரன், இங்கிலாந்துக்கு எதிராக, 1984). லாரா (வெஸ்ட் இண்டீஸ். 153 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1999).

    ஜெயவர்த்தனே (இலங்கை. 123 ரன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006), டெண்டுல்கர் (இந்தியா. 103 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 2008), வி.வி.எஸ். லட்சுமண் (இந்தியா. 103 ரன் இலங்கைக்கு எதிராக 2010). ஆகியோர் வரிசையில் குசால்பெரைரா இணைந்தார்.

    இதை தொடர்ந்து குசல் பெரேராவுக்கு பாராட்டு குவிகிறது. இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா கூறியதாவது:-

    குசல் பெரேரா மிக சிறந்த வீரர். இதை ஒரு மிக சிறந்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். அவரது ஆட்டத்தை மறக்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறும் போது “குசல் பெரேரா ஒரு அருமையான இன்னிங்சை விளையாடி இருக்கிறார். அவர் நெருக்கடியான நேரத்தில் சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தை என்றுமே யாராலும் மறக்க முடியாது” என்றார்.

    இதேபோல் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோரும் குசல் பெரேராவை வெகுவாக பாராட்டினார். #KusalPerera #SAvSL
    தென் ஆப்பிரிக்காவில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்புக்குழுவினர் தீவிர முயற்சி செய்து பாதுகாப்பாக மீட்டனர். #AfricaBabyRescued
    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், சாலையோரம் குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டடுள்ளது. இதனையடுத்து அவ்வழியே நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவர் கேட்டதும், சுற்றியும் தேடியுள்ளர். தொடர்ந்து சத்தம் கேட்கவே அருகில் இருந்த மழைநீர் வடிகாலுக்கு அருகில் சென்று பார்த்துள்ளார்.

    அப்போது ஆழத்தில் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததை உணர்ந்தார். உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    சுத்தி மற்றும் உளி கொண்டு குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிகாலை மெதுவாக தோண்டினர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.  மீட்கப்பட்ட குழந்தை டர்பனில் உள்ள இன்கோசி ஆல்பர்ட் லுத்துளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.



    அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறும்போது, குழந்தையின் உடலில் லேசான காயங்கள் மற்றும் வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தையின் பெற்றோரை கண்டறிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  #AfricaBabyRescued
    தென்ஆப்பிரிக்காவில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoalMineBlast
    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் முமாலங்கா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

    இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் உள்ள செப்பு கம்பிகளை திருடுவதற்கு 20 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் நுழைந்தது.

    அப்போது திடீரென கியாஸ் வெடித்தது. இதில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் 5 பேர் சடலங்களை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.#CoalMineBlast
    குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை பல லட்சம் மக்கள் கண்டுகளித்தனர். 



    இந்நிலையில், சிறப்பு விருந்தினராக டெல்லி வந்துள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.

    அப்போது, அதிபர் சிரில் ராமபோசா ராகுல் காந்தியை தென் ஆப்பிரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் உடனிருந்தார். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
    சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    டர்பன்:

    பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி டர்பனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 204 ரன் இலக்கை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 80 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது.

    பெலக்வாயோ- வான்டெர் துஸ்சென் ஜோடி அபாரமாக விளையாடி வெற்றி பெற வைத்தது. இந்த ஆட்டத்தின் போது பெலக் வாயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது இன வெறியுடன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    இதற்கிடையே சர்பிராஸ் அகமது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டு உள்ளார். அதில் எனது பேச்சு மூலம் யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டும் நேரடியாகவும் எனது வார்த்தைகளை கூறவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் சர்பிராஸ் அகமதுவின் இனவெறியுடனான பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 முதல் 8 வரை சஸ்பெண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

    2 சஸ்பெண்டு புள்ளி பெறும் வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஒரு நாள் போட்டிக்கு தடை விதிக்கும் வகையில் விதி உள்ளது. இதனால் சர்பிராஸ் அகமதுவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    தென் ஆப்பிரிக்காவில் ஒரே தண்டவாளத்தில் சென்ற இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். #SouthAfrica #TrainAccident
    ஜோகனஸ்பெர்க்:

    தென்ஆப்பிரிக்காவில் பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில்கள்
    இயக்கப்பட்டு வருகிறது. 

    பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் இரண்டு ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இன்று மதியம் சென்று கொண்டிருந்தன. அதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், முன்னால் சென்று கொண்டிருந்த ரெயில் மீது பின்னால் வேகமாக வந்த ரெயில் மோதியது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    தண்டவாளத்தில் ரெயில்கள் மோதிய விபத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பயணிகள் ரெயில் விபத்து குறித்து அறிந்த தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமோபோசா. விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #SouthAfrica #TrainAccident
    16 நாடுகள் பங்கேற்கும் உலககோப்பை ஹாக்கி போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நாளை தொடங்குகிறது. #HockeyWorldCup2018
    புவனேஸ்வர்:

    உலககோப்பை ஹாக்கி போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    பார்சிலோனாவில் (ஸ்பெயின்) நடந்த அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    அதன்பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 1978-ல் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் உலககோப்பை ஹாக்கிப்போட்டி நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது.

    14-வது உலககோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நாளை (28-ந்தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 16-ந்தேதி வரை அங்குள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம்:-

    அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், நியூசிலாந்து (‘ஏ’ பிரிவு), நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா (‘பி’ பிரிவு), இந்தியா, பெல்ஜியம், தென்ஆப்பிரிக்கா, கனடா (‘சி’ பிரிவு), நெதர்லாந்து, ஜெர்மனி, பாகிஸ்தான், மலேசியா (‘டி’ பிரிவு).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 4-வது இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்படும்.

    ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் கிராஸ் ஓவர் முறையில் விளையாடும்.

    உதாரணத்துக்கு ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் அணி ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடிக்கும் அணியுடன் மோதும். இந்த 4 ஆட்டத்தின் முடிவில் 4 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

    வருகிற 9-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. 2-வது சுற்று 10 மற்றும் 11-ந்தேதிகளிலும், கால்இறுதி 12 மற்றும் 13-ந்தேதிகளிலும் நடைபெறுகிறது. 15-ந்தேதி அரை இறுதியும், 16-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.

    மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    1975-ம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வென்றது. அதற்கு பிறகு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 5-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. கடந்த உலககோப்பையில் 9-வது இடத்தை பிடித்தது.

    கால்இறுதிக்கு நேரடியாக நுழைவது இந்திய அணிக்கு சவாலாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    உலககோப்பை ஹாக்கியில் இந்தியா மோதும் ‘லீக்’ ஆட்டம் வருமாறு:-

    நவ. 28: தென்ஆப்பிரிக்காவுடன் மோதல்.

    டிசம்பர். 2: பெல்ஜியத்துடன் மோதல்.

    டிசம்பர். 8: கனடாவுடன் மோதல் (இரவு 7 மணிக்கு இந்த ஆட்டங்கள் நடக்கிறது).

    உலககோப்பையில் விளையாடும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் விவரம்:-

    கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன், பகதூர் பதக்.

    பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், கோதாஜித், சுரேந்தர் குமார், வருண்குமார், பிரேந்திர லகரா, அமித் ரோகிதாஸ்.

    நடுகளம்: மன்பிரீத்சிங்(கேப்டன்), சுமித், நில்கந்தா சர்மா, சிங்லெசேனா.

    முன்களம்: தீப்ரீத்சிங், சிம்ரன் ஜித்சிங், மன்தீப் சிங், அக்‌ஷன்தீப்சிங்.

    நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் ‘சி’ பிரிவில் உள்ள பெல்ஜியம்- கனடா (மாலை 5 மணி), இந்தியா- தென்ஆப்பிரிக்கா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

    இன்று மாலை உலக கோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக நடக்கிறது.



    இதில் ஷாருக்கான், மாதுரிதீட்சித் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும், ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    உலககோப்பை ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1982-ல் மும்பையிலும், 2010-ல் டெல்லியிலும் நடைபெற்றது. #HockeyWorldCup2018
    ×